உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகள் மிகத் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் மக்களுக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கொழும்பு - புறக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் குற்றச் செயல்களில் ஈடுப…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகள் மிகத் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் மக்களுக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கொழும்பு - புறக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதுடன், அவர்களது குற்றச் செயல்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலாலி காணி விவகாரம் தொடர்பில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்க முடியாத நிலையும், இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய பதிலடி கொடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுக்காத சில அரசியல் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அநுர அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பி வருவதை அவதானிக்க முடிகிறது. இதுபோன்று, நாட்டில் நாளாந்தம் இடம்பெறும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது “நாட்டு நடப்பு” நிகழ்ச்சி,












