இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை என்ற ஒரு புதிய புரளி-சபையை கொண்டு வந்து…
இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை என்ற ஒரு புதிய புரளி-சபையை கொண்டு வந்து பெருந்தோட்ட வாழ் மலையக தமிழருக்கும் காணி உரிமையை தந்திரமாக மறுக்கவும், அவர்களை வெளி பலான இடங்களில் குடியேற்றவும், தொடர்மாடி வீடுகளை கட்டி குடியேற்றவும், என்பிபி அரசு திட்டம் இடுகிறது.
இது இவர்களது பழைய ஜேவிபி கொள்கை. இதற்கு இவர்கள் இன்று, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை ஐநா அலுவலகம், ஆகிய சர்வதேச நிறுவனங்களை தந்திரமாக பயன்படுத்த முயல்கிறார்கள்.காணிக்கான உரிமை
காலநிலை, மண்சரிவு, நீர் பிடிப்பு, ஆகிய உன்னத விஷயங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கிறது. ஆனால், இவை எமது மக்களின் காணி உரிமைக்கு குந்தகம் விளைவிக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேச இயக்குனர் ஷனென் கோவ்லின் தலைமையிலான வங்கி குழுவினரிடம் தெளிவாக தெரிவித்துள்ளார்.ஏடிபி குழுவினருக்கு மனோ எம்.பி மேலும் கூறியுள்ளவை தொடர்பில், தமுகூ ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூற பட்டுள்ளதாவது; இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில், மலையக மக்கள் வளர்ச்சி குன்றிய பிரிவினர். இதற்கு வரலாற்று காரணங்கள் உள்ளன. எமது மக்களுக்கு 2003 ஆண்டு தான் கடைசி தொகுதி குடியுரிமையே கிடைத்தது.
ஆகவே நாம் ஆரம்பித்த புள்ளி தாமதம் ஆனது. ஆகவே வளர்ச்சியும் தாமதம் ஆனது. இன்று எமது குடியுரிமை முழுமை அடைய வேண்டும் என்றால், எமது காணிக்கான உரிமை உறுதி படுத்த பட வேண்டும். காணி உரிமை இல்லாவிட்டால், எமது குடியுரிமை முழுமை அடையாது. அது கிடைத்தால், ஏனைய உரிமைகள் படிப்படியாக வந்து சேரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.












