அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் ஆகஸ்ட் 20 ஆ…
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் ஆகஸ்ட் 20 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு இருதய பிரச்சினைகள் காரணமாக அவருக்கு இதயக்கருவி பொருத்தப்பட்டதாகவும், தற்போது தேசிய வைத்தியசாலையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். எனவே சலேவை நீதிமன்ற கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்கு தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், சலே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யமாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.












