வீதி விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களிலேயே நிகழ்கின்றன என்று வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கூறியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன, தகுந்த தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசத்தை அணிவதன் மூலம்…

வீதி விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களிலேயே நிகழ்கின்றன என்று வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கூறியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன, தகுந்த தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசத்தை அணிவதன் மூலம் விபத்துகளில் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.2025 ஆம் ஆண்டில்

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் நாயகமும், சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான மனோஜ் ரணகலா, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை 1,626 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.2025 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவான 1,585 என்ற எண்ணிக்கையை விட இது அதிகம் என்றும் மனோஜ் ரணகல கூறியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் 749 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 ஓட்டுநர்களும் அடங்குவர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.