21 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து (1,793,480) ரூபாய் வாடகை பணம் இதுவரை வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும், இந்த நிலுவை வாடகைகள் 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்திற்குரியவை என்பதும் தெரியவந்துள்ளது.வாடகை நிலுவைகள் இதேபோல், 2009-2016…
21 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து (1,793,480) ரூபாய் வாடகை பணம் இதுவரை வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நிலுவை வாடகைகள் 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்திற்குரியவை என்பதும் தெரியவந்துள்ளது.வாடகை நிலுவைகள் இதேபோல், 2009-2016 காலகட்டத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட, கொழும்பு 05 உள்ள 08 வீடுகளிலிருந்து உரிய வாடகையை வசூலிக்க ஜனாதிபதி செயலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 2012 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்திற்கு, 22 வீடுகளிலிருந்து சேர வேண்டிய நிலுவை வாடகை 1,73,190 ரூபாய் ஆகும்.
ஜெயவர்த்தனபுரவில் உள்ள 15 வீடுகளுக்கு, 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வாடகை 84,49,265 ரூபாய் ஆகும்.
பொது நிர்வாகம் தொடர்பான 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7












