அமெரிக்காவின் புதிய உளவுத்துறை மதிப்பீட்டின்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த சில ஆண்டுகளில் நேட்டோ (NATO) கூட்டணியின் ஒற்றுமையை சோதிக்கும் நோக்கில் அதன் உறுப்பினர் நாடுகளில் ஒன்றின் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. முன்னதாக, உக்ரை…

அமெரிக்காவின் புதிய உளவுத்துறை மதிப்பீட்டின்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த சில ஆண்டுகளில் நேட்டோ (NATO) கூட்டணியின் ஒற்றுமையை சோதிக்கும் நோக்கில் அதன் உறுப்பினர் நாடுகளில் ஒன்றின் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

முன்னதாக, உக்ரைன் போரில் ரஷ்யா முழுமையாக ஈடுபட்டிருப்பதால் நேட்டோவுடன் நேரடி மோதலை புதின் தவிர்ப்பார் என அமெரிக்க அதிகாரிகள் கருதினர்.ரஷ்யாவின் நோக்கம் ஆனால் தற்போது அந்த மதிப்பீடு மாறியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யாவின் நோக்கம் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது அல்ல; மாறாக, நேட்டோ கூட்டணியின் ஒற்றுமையிலும், அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதியிலும் பிளவை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் American Enterprise Institute-இன் மூத்த ஆய்வாளர் ஹெதர் கான்லி கூறுகையில், "அப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்கா எப்படி பதிலளிக்கும் என்பதே மிகப்பெரிய கேள்வி. நேட்டோவின் நம்பகத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தி, அமெரிக்காவை அதன் கூட்டாளிகளிடமிருந்து பிரிப்பது ரஷ்யாவின் நீண்டகால இலக்காக இருந்து வருகிறது."

நேட்டோ நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்கள் மூலம் சிறிய எல்லைப் பகுதிகளை கைப்பற்றும் ரகசிய நடவடிக்கைகள் நேட்டோவின் கிழக்கு எல்லையில் வரையறுக்கப்பட்ட இராணுவ ஊடுருவல்

இந்த வகை தாக்குதல்கள் 2026 இலையுதிர் காலம் முதல் 2029 வரை எந்த நேரத்திலும் நடைபெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நேட்டோவின் பதில்  எச்சரிக்கைகள்

Article 5 காரணமாக நேரடி போர் சாத்தியம் குறைவு

நேட்டோ ஒப்பந்தத்தின் Article 5-இன்படி, ஒரு உறுப்பினர் நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது அனைத்து உறுப்பினர்களின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.

இதனால் நேரடி தரைப்படை தாக்குதல் நிகழும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், சைபர் தாக்குதல் அல்லது மறைமுக (Hybrid) தாக்குதல்கள் சட்ட ரீதியாக சிக்கலான பகுதியாக இருப்பதால் அவை அதிகம் கவலை அளிக்கின்றன. நேட்டோவின் பதில்

இந்த எச்சரிக்கைகள் குறித்து நேட்டோ செய்தித் தொடர்பாளர் கர்னல் மார்ட்டின் ஓ'டொனல் கூறியதாவது:

"எந்தவிதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள நேட்டோ எப்போதும் தயாராக உள்ளது. தேவையான நேரத்தில் தடுக்கவும், பாதுகாக்கவும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்."

இந்த உளவுத்துறை அறிக்கை வெளியாகும் நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட இராணுவ உதவி மற்றும் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவின் சில முக்கிய ஏவுகணை கையிருப்புகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பற்றாக்குறையாக கூறப்படும் ஆயுதங்கள்

Precision Strike Missiles (PrSM) ATACMS ஏவுகணைகள் Stinger ஏவுகணைகள் Patriot ஏவுகணை தடுப்பு அமைப்புகள் SM-3 THAAD தடுப்பு அமைப்புகள்

ஆனால், அமெரிக்க பாதுகாப்புத் துறை (Pentagon) இந்த தகவல்களை மறுத்துள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் கூறுகையில்,

"அமெரிக்க இராணுவத்திடம் தேவையான அனைத்து ஆயுதங்களும் போதுமான அளவில் உள்ளன. எங்கள் திறனை குறைத்து மதிப்பிடும் எந்த எதிரியும் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்."

வாஷிங்டனில் அதிகரிக்கும் விவாதம்

இராணுவ நிபுணர்கள் கூறுவதாவது, தற்போது கையிருப்பு குறைந்துள்ளதாக கூறப்படும் இந்த ஏவுகணைகள், எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் மிகவும் அவசியமானவை.

மேலும், சீனாவுடனான சாத்தியமான மோதலையும் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பை பாதுகாப்பது குறித்து வாஷிங்டனில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.