Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் 100 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த மாதம் 05ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட…
Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் 100 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த மாதம் 05ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பல சொத்துக்களுக்கும் கைதிகள் பதிவு ஆவணங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்ததுடன் 100-இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.இந்நிலையில், 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு சிறைச்சாலையில் தற்போது 600-இற்கும் மேற்பட்ட கைதிகள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒன்லைன் ஊடாகவும் சிலர் நேரடியாக நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, குருவிட்ட, பல்லன்சேன மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திய கைதிகள் தொடர்பில் சிறைச்சாலை அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை இன்று (10) கிடைக்கப்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.கடந்த 06ஆம் திகதி இரவு மகசின் சிறைச்சாலையிலும், 07ஆம் திகதி குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமிலும் ஏற்பட்ட பதற்றநிலையினால் 03 கைதிகள் உயிரிழந்ததுடன் 77 பேர் காயமடைந்தனர்.குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக உயிரிழந்த இரு கைதிகளின் பிரேத பரிசோதனைகள் இன்று (10) இடம்பெறவுள்ளன.இதேவேளை, சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை, பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான எதிரொலியாகும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

-558726_850x460.jpg)










