குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். மக்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையின்படி, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதற்கும் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன்…
குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். மக்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையின்படி, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதற்கும் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.மத்திய வங்கி பிணைமுறி மோசடி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய குற்றங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அரச அதிகாரத்தைப் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஊழல்களும் மோசடிகளும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டுத் தண்டிக்கப்படுவது அரசாங்கத்தின் முதன்மையான பணியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் நாட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டு, அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றால் எதிர்கட்சியினர் உண்மையிலேயே மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.சிறைக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதைத் திருத்துவது தொடர்பான எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏனெனில் அது அவர்களுக்கு ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கும்.ஆனால் இங்கு நடப்பது நாட்டிற்கு அழிவல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். சட்டம் நடுநிலையாகச் செயல்படும் போது, தாங்கள் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற பயமே அவர்களின் இந்த எதிர்ப்பிற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் முழுப் பொறுப்பேற்கும் என்றும், இத்தகைய சட்டத் திருத்தங்களின் மூலம் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் திருத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் வலுப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.












