பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை காரணமாக, அவரை அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செ…
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை காரணமாக, அவரை அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அடுத்த விசாரணை முடியும் வரை அங்கேயே வைத்திருக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இம்ரான்கானின் உடல்நிலை
இம்ரான்கானின் முழுமையான மருத்துவப் பதிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வைத்தியசாலைக்கு வெளியே பாதுகாப்பை உறுதிசெய்து சட்டம் ஒழுங்கைப் பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அடியாலா சிறை அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சிகிச்சைக்குப் பிறகு இம்ரான்கானின் கண் நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், அவரது பார்வை "ஏறக்குறைய இயல்பாக" இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியானது, அவரது உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியும், அவரது தனிப்பட்ட வைத்தியர்களை அணுக அனுமதி கோரியும், அவரை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
2018 முதல் 2022-ல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் வரை பாகிஸ்தானின் பிரதமராகப் பணியாற்றிய இம்ரான்கான், 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டு, தொடர்ச்சியான சட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




-559123_850x460.jpg)



-559122_850x460.jpg)



