பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள…
பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கரந்தெனிய சுத்தாவின் குடும்பத்தினர், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் பொலிஸ் சந்தேகிக்கின்றது. பெக்கோ சமன், கெஹெல்பத்தர பத்மேவுடன் இந்தோனேசியாவில் கைது
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பெக்கோ சமன், கெஹெல்பத்தர பத்மேவுடன் சேர்ந்து கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டது. மித்தெனிய கஜ்ஜா என்று அழைக்கப்படும் அருண பிரியந்த விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பெக்கோ சமன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் இன்று காலை (13) உருபோக்கா - மாத்தறை வீதியில் உள்ள தம்பஹல பொல்வத்த பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கொலைக்கான காரணம்
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிதியாவ பகுதியில் உள்ள வீட்டிற்கு வருகை தந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று (12) துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார், மித்தெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்போது 9 மி.மீ. ரக துப்பாக்கியை கொண்டு நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், பெண்ணின் மார்பை நோக்கி சுமார் 7 முறை சுட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.





-558887_850x460.jpg)





-558925_850x460.jpg)
-558926_850x460.jpg)