மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பணியாற்றி வரும் பிரான்ஸ் நாட்டின் சிரேஷ்ட தூதுவர் புருனோ ஃபுஷே மீது பிரான்ஸ் அரசு ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பிரெஞ்சு வார இதழான 'லே கேனார்ட் என்ஷைன்' (Le Canard enchaîné) வெளியிட்ட அறிக்கையின்படி, தலைநகர் பாங்கியிலுள்ள (Bangui) தமது உ…
மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பணியாற்றி வரும் பிரான்ஸ் நாட்டின் சிரேஷ்ட தூதுவர் புருனோ ஃபுஷே மீது பிரான்ஸ் அரசு ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
பிரெஞ்சு வார இதழான 'லே கேனார்ட் என்ஷைன்' (Le Canard enchaîné) வெளியிட்ட அறிக்கையின்படி, தலைநகர் பாங்கியிலுள்ள (Bangui) தமது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சுமார் 30 பெண்களை வரவழைத்து முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
2024 ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்கள், தூதரகப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.விசாரணை இது தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு விசாரணையைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான நிர்வாக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 65 வயதான புருனோ ஃபுஷே, கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் அங்குத் தூதுவராகப் பணியாற்றி வருகிறார்.
பிரான்ஸ் மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளைச் சீரமைக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில், இந்தத் தூதுவரின் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












