அமெரிக்காவுடனான ஆறு மாத காலப் போரினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை ஈரானியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதுடன், பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்து இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பைப் பலப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளனர். அமெரிக்காவின் தடைகள் மற்றும்…

அமெரிக்காவுடனான ஆறு மாத காலப் போரினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை ஈரானியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதுடன், பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்து இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பைப் பலப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளனர்.

அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை காரணமாக நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் சுமார் 35 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் அழுத்தங்கள் எனினும், அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப் போவதில்லை என்றும், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளப் போவதாகவும் ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை மற்றும் பொருட்கள்-சேவைகளுக்கான விலை உயர்வைச் சீரமைப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா முஜ்தபா காமேனி வலியுறுத்தியுள்ளார்.

அந்நாட்டில் கடந்த மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 66 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், அன்றாட வாழ்க்கைச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இராஜதந்திரம் மற்றும் தற்காப்பு இதேவேளை, நாட்டின் எல்லைகளையும் நலன்களையும் பாதுகாக்க இராஜதந்திரம் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டு வழிகளையும் அரசாங்கம் சம அளவில் முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கத்தார் நாட்டின் பிரதமருடன் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியின் கப்பல் போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவது தொடர்பில் ஈரானியத் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.