கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடைவிவகாரத்தினை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான பிரசாரத்தினை கண்டித்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் கவனஈர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில்…
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடைவிவகாரத்தினை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான பிரசாரத்தினை கண்டித்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் கவனஈர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை அவமதிப்பை எதிர்த்து இன்று (17) இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை 6 தொழில் சங்கங்களின் ஆதரவுடன் அமைதியாக சிற்றூழியர்களின் சங்கத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது. சிற்றூழியர்களின் உடைவிவகாரம் அரச சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடைகளை அணிவந்துவரும் நிலையில் சுகாதார அமைச்சினால் 06-08-2026அன்று சிலர் நியமனங்களைப்பெற்று வைத்தியசாலைக்குவந்த சுகாதார சிற்றூழியர்கள் சிலர் சீருடை தொடர்பில் ஏற்படுத்திய குழப்பங்களை சில சக்திகள் இனவாத ரீதியில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை கண்டித்தும் அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தகோரியும் இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டன. இதன்போது சீருடையின்றி வருபவர்களை கடமைக்கு அனுமதிக்காதே,சமூக வலைத்தளங்களே எங்களைக்கொல்லதே,அனைவருக்கும் பொதுவான சீரூடையை அணிய அனுமதியுங்கள்,சீருடை தொடர்பான சுற்றுநிரூபத்தினை உடன் அமுல்படுத்து,வைத்தியசாலைக்கு எதிராக அவதூருகளை பரப்பாதீர்கள் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மத ரீதியான சீருடைக்கு அனுமதி இல்லை, நிர்வாகத்திற்கு கட்டுப்படாத புதிய பெண் ஊழியர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுங்கள், சட்டம் கலாச்சார உடையை அங்கிகரிக்குமானால் இனி சீருடை என்ற விதியை அகற்றுங்கள்,சகல மதத்தவருக்கும் சீருடை விலக்கை தாருங்கள் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கோரிக்கைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தேசிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக தகவல் - குமார்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்












