உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கடமை தவறியமை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக மரண தண்டனை விதிக்கப்படுமானால் சட்டமா அதிபர் திணைக்களத்தின்அலட்சிய…

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கடமை தவறியமை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக மரண தண்டனை விதிக்கப்படுமானால் சட்டமா அதிபர் திணைக்களத்தின்அலட்சிய போக்குக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவற்றை நாம் கேள்விக்குட்படுத்தக் கூடாதா? என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் மயிர்க் கூச்செறியும் தகவல் ஒன்றை அவர் வெளியி்ட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்ட தகவல்கள்.. சட்டமா அதிபரிடம் கோரப்பட்ட ஆலோசனைஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக் கோரி அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் சரியான மேற்பார்வையும் ஆர்வமும் காட்டவில்லை என்பதை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஆராய்ந்தது அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு: பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு 2017 ஜூன் 07 திகதியிட்ட கடிதம் மூலம் C18/2017 எனும் கோப்பைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு சட்டமா அதிபரிடம் கேட்டுக் கொண்ட ஆலோசனையானது: "தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்ய முடியுமா மற்றும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா?" என்பதாகும். அப்போது அந்தப் துறைக்கு பொறுப்பான மேற்பார்வை அதிகாரியாக இருந்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி அசாத் நவாமிக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.ஆனால் 15 ஜூன் 2017 ஆகும் போதே இந்தக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற நிலையில் அசாத் நவாமி அதை அராய்ந்து பார்க்குமாறு அரச சட்டத்தரணி மலிக் அஸீசுக்கு குறிப்பொன்றை இட்டு பாரப்படுத்தியுள்ளார். மீண்டும் (TID) 2018 ஜூன் 14 ஆம் திகதியிட்ட குறுந்தகடு (CD) மற்றும் மற்றொரு ஆவணத் தொகுப்பை அனுப்பும் வரை இந்தக் கோப்பு குறித்து எந்தவொரு கவனமும் செலுத்தப்பட்டதாக குறிப்பில்லை. அப்படியானால், 15 ஜூன் 2017 அன்று கிடைத்த கோப்பு, 14 ஜூன் 2018 வரை எந்தவொரு கவனமும் செலுத்தப்படாமல் இருந்துள்ளது என்பது விசாரணை ஆணைக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் அரச சட்டத்தரணி மலிக் அஸீஸ் (TID)யால் அனுப்பப்பட்ட கோப்புக்கு முதலாவது குறிப்பு 12 மார்ச் 2019 அன்றே இடப்பட்டுள்ளது. தாமதத்திற்கான காரணங்கள்அதற்குள் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்குக் கிடைத்து ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. இந்த அத்தியாயத்தைப் படிக்க முடியாதவர்களுக்காகவே நான் இதனைக் கூறுகிறேன்: இந்தக் கோப்பைக் கையாள்வதில் அரச சட்டத்தரணி அஸீஸ் தரப்பில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக விசாரணை ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களிலிருந்து தெரியவருகிறது.அரச சட்டத்தரணி அஸீஸின் சாட்சியம் மற்றும் ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களைக் கருத்திற்கொண்டு,அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவிற்குப் (Public Service Commission) பரிந்துரைக்கப்பட்டுள்து.அதேபோல், C18/2017 கோப்பை அஸீஸிடம் ஒப்படைத்த பிறகு அக்கோப்பு தனக்குக் கிடைக்கவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாமி கூறுகிறார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இக்கோப்பு பற்றி அவர் அறிந்துள்ளாராம். சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆரம்பக்கட்ட தாமதத்தை நாம் ஈஸ்டர் விசாரணையில் எங்குமே காணவில்லை. தாக்குதல் நடப்பதற்கு முன்னரே நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தாக்குதல் நடப்பதற்கு முன்னரே அந்த நபர்களைக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஆலோசனை கேட்டிருந்தது.