சிறைச்சாலை வன்முறை மற்றும் அரசாங்க நடவடிக்கை நாட்டில் அண்மையில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார…

சிறைச்சாலை வன்முறை மற்றும் அரசாங்க நடவடிக்கை நாட்டில் அண்மையில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், "கடந்த காலங்களில் இலங்கை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு முக்கிய மத்தியஸ்த நிலையமாக விளங்கியது. தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருளை முழுமையாக ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.உண்மைகள் வெளிச்சம்.. போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போதைய சம்பவங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளைத் தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர்.சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்று அவசர கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.சிறைச்சாலை அமைதியின்மைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டின் அமைதியைக் குலைக்க முயலும் நபர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.