திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில் குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று யாழ்ப்பாணம் அழைத்து நோக்கி வரப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பவானி வீதி விடுவிப்புக்குத் தடைபோட முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்ட…

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில் குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று யாழ்ப்பாணம் அழைத்து நோக்கி வரப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பவானி வீதி விடுவிப்புக்குத் தடைபோட முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளதுகடும் விசனம் இதையடுத்தே, இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு பிழையான தகவல்களைக் கூறி தெற்கில் இனவாதம் பரப்பப்படுகின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறாக போலித் தகவல்களைப் பரப்பி ஆட்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில், போராட்டம் நடத்துவதற்காக அவர்கள் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வரப்படுகின்றனர்.

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளையும், வீதியையும் விடுவித்தால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படும் என்று நீதிமன்றத்தை நாடும் பொலிஸார், இத்தகைய அப்பட்டமான குழப்பச் செயல்கள் தொடர்பில் அமைதியாக உள்ளமை பல தரப்பினரிடமும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.