பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றத்திற்காக, ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் அவரது பாராளுமன்றப் பதவி ரத்தாகும் என்பது அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எனப் பேராசிரியர் மற்றும் ச…
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றத்திற்காக, ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் அவரது பாராளுமன்றப் பதவி ரத்தாகும் என்பது அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எனப் பேராசிரியர் மற்றும் சட்டத்தரணி பிரதிபா மகாநாம ஹேவா தெரிவித்தார்.
அத்துடன், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு ஏழு வருட காலத்திற்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் உரிமையும் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பதுளை மேல் நீதிமன்றத்தால் ஒன்றரை வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது பாராளுமன்றப் பதவி ரத்தாகும்.
எந்தவொரு நபரும் இரண்டு வருடங்களுக்குக் குறையாத காலத்திற்குச் சிறைத்தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றத்திற்காக, ஏதேனும் நீதிமன்றத்தினால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத காலத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தாலோ அல்லது கடந்த ஏழு வருட காலத்தில் அந்தத் தண்டனையை முழுமையாக அனுபவித்திருந்தாலோ அல்லது மரண தண்டனைக்கு உட்பட்டிருந்தாலோ அல்லது அத்தகைய தண்டனைத் தீர்ப்பைச் செயற்படுத்துவதற்குப் பதிலாக ஆறு மாதங்களுக்குக் குறையாத காலத்திற்குச் சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தாலோ அல்லது கடந்த ஏழு வருட காலத்தில் அந்தத் தண்டனையை முழுமையாக அனுபவித்திருந்தாலோ, அந்த நபர் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதியற்றவராவார் எனவும் அரசியலமைப்பின் 89(ஈ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தீர்ப்புக்கு எதிராகச் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேன்முறையீடு செய்தால், அந்தத் தருணத்திலிருந்து பாராளுமன்றப் பதவி ரத்தாகாது. அத்துடன், ஜனாதிபதிப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து தகுியின்மைகள் அனைத்தும் ரத்தாகிவிடும்.
தண்டனை பெற்ற பாராளுமன்ற உறுப்பினருக்குத் தண்டனைக்கு எதிராகவும், பாராளுமன்றப் பதவி தொடர்பாகவும் உத்தரவு ஒன்றைப் பெறுவதற்காக மேன்முறையீடு செய்ய முடியும் என மகாநாம ஹேவா தெரிவித்தார்.
இந்த விடயங்கள் அரசியலமைப்பின் 89(ஈ) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.
தண்டனை பெறும் பாராளுமன்ற உறுப்பினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும், அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திற்கும் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனச் சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


-558033_850x460.jpg)




-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558066_850x460.jpg)

