அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் தாயார், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். சுரேஷ் சலேவின் தடுப்புக்காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள குறித்த கடிதம் நேற்று (24.08.2026) ஜனாதிபதி செயலகத்திற்கு…

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் தாயார், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

சுரேஷ் சலேவின் தடுப்புக்காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள குறித்த கடிதம் நேற்று (24.08.2026) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.நாட்டிற்காக தியாகம் குறித்த கடிதத்தில், எனது மகன் 37 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, தனது இளமையையும், குடும்பத்துடன் செலவிடக் கூடிய பொன்னான ஆண்டுகளையும் நாட்டிற்காக தியாகம் செய்தார்.

ஒரு வயதான தாய்க்கு, தனது மகன் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் இருப்பதைப் பார்ப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

இருப்பினும், ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், அவை விசாரிக்கப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும்.விசாரணைகள் ஒரு தாயாக எனது மகனின் தடுப்புக்காவல் மேலும் நீட்டிக்கப்பட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

விசாரணைகள் சான்றுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். தடுப்புக்காவல் என்பது சான்றுகளுக்கு மாற்றாக அமையக் கூடாது என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு வழங்கக் கோரியுள்ள சுரேஷ் சலேவின் தாயார், தனக்குச் சிறப்புச் சலுகைகள் எதுவும் தேவையில்லை என்றும், நீதி, மனிதாபிமானம் மற்றும் நியாயமான வாய்ப்பு மட்டுமே வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில் சுரேஷ் சலேவின் மனைவியும் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.