2016 முதல் 2024 வரை 451 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 115 நாடாளுமன்ற அதிகாரிகளும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏறக்குறைய 27 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்றம் மீதான இந்த சிறப்பு தணிக்கை அறிக்கை, இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமான சமுதிகா ஜெயரத…
2016 முதல் 2024 வரை 451 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 115 நாடாளுமன்ற அதிகாரிகளும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏறக்குறைய 27 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றம் மீதான இந்த சிறப்பு தணிக்கை அறிக்கை, இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமான சமுதிகா ஜெயரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டுள்ள கோடிக்கணக்கான பணம்
இதன்படி, 451 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2016 முதல் 2024 வரை வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏறக்குறைய 21 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். 115 நாடாளுமன்ற அதிகாரிகள் 2016 முதல் 2024 வரை 83 மூன்று வெளிநாட்டுப் பயணங்களுக்காக 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளனர்.
இந்த வெளிநாட்டுப்பயணங்கள், நாடாளுமன்றத்தின் வெளி உறவுகள் மற்றும் நெறிமுறை அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன.
இருப்பினும், வெளிநாட்டுப் பயிற்சித்திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் அதிகாரிகள் பெறும் அறிவையும் அனுபவத்தையும் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பதற்கு முறையான அமைப்பு எதுவும் இல்லை என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
சம்பள உயர்வுகள் வழங்கும் போது, ஏனைய அரச அதிகாரிகளை விட நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதற்கான எந்த காரணங்களையும் கண்டறியவில்லை என்றும் குறிப்பிடுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8












