நிறம்: அம்பர் (எச்சரிக்கையாக இருங்கள்) திகதி மற்றும் நேரம்: 2026 ஆகஸ்ட் 02 ஆம் நாள் காலை 11:30 மணிக்கு செல்லுபடியாகும் காலம்: 2026 ஆகஸ்ட் 03 ஆம் நாள் காலை 11:30 மணி வரை பாதிக்கப்படக்கூடிய மாகாணங்கள் மற்றும் மாவட்டங்கள்:வடமத்தியஇ வடமேல்இ சப்ரகமுவஇ மத்திய மற்றும் தென் மாகாணங்கள் ம…
நிறம்: அம்பர் (எச்சரிக்கையாக இருங்கள்) திகதி மற்றும் நேரம்: 2026 ஆகஸ்ட் 02 ஆம் நாள் காலை 11:30 மணிக்கு செல்லுபடியாகும் காலம்: 2026 ஆகஸ்ட் 03 ஆம் நாள் காலை 11:30 மணி வரை பாதிக்கப்படக்கூடிய மாகாணங்கள் மற்றும் மாவட்டங்கள்:வடமத்தியஇ வடமேல்இ சப்ரகமுவஇ மத்திய மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்குக் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விவரம்:நாட்டின் ஊடாக நிலவும் தீவிர நிரியதிதிசைக் (நிறைந்த) பருவக்காற்று நிலைமை காரணமாகஇ வடமத்தியஇ வடமேல்இ சப்ரகமுவஇ மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும்இ திருகோணமலை மாவட்டத்திலும் (விட்டவிட்டு) மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எதிர்பார்க்கப்படும் சேதங்கள்:வீடுகளின் கூரைகளில் உள்ள தகரங்கள் மற்றும் ஓடுகள் போன்றவை பெயர்ந்து செல்லக்கூடும். மின் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பிகளுக்குச் சேதம் ஏற்படலாம். மரங்களின் கிளைகள் முறிந்து விழும் அபாயத்துடன்இ வீதிகளுக்கு அருகில் உள்ள பெரிய மரங்களும் வேரோடு சாய்ந்து விழக்கூடும். நெற்செய்கை நிலங்கள்இ வாழைஇ பப்பாளி போன்ற பழப்பயிர்கள் மற்றும் தோட்டப் பயிர்களுக்குச் சேதங்கள் விளையலாம். துறைமுகப் பகுதிகளுக்கு அருகில் தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளும் உள்கட்டமைப்புகளும் சேதமடையக்கூடும். கரையோரங்களை ஒட்டிய தாழ்வான நிலப்பகுதிகள் கடல்நீரால் மூழ்கடிக்கப்படலாம்.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்:வீடுகளின் கூரைத் தகரங்கள் அல்லது ஓடுகள் பறந்து வருவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். அறுந்துவிழும் மின் கம்பிகளுக்கும்இ முறிந்து விழும் மரங்களுக்கும் அருகில் செல்வதைத் தவிர்த்துப் பாதுகாப்பாக இருங்கள். மாறிவரும் தீவிர வானிலை நிலைமைகள் குறித்து எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள். ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்படின்இ உங்களது பிரதேசத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உதவி பெறுங்கள்.
காலநிலை அவதான நிலையம் மூலம் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் குறித்துத் தொடர்ந்தும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.












