தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எடுத்துள்ளது. அதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த…

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எடுத்துள்ளது.

அதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று (05.08.2026) காலை 9.00 மணி முதல் நாளை (06) காலை 9.00 மணி வரை செல்லுபடியாகும்.எச்சரிக்கை நிலை 2 கண்டி மாவட்டம் – உடபலத, டோலுவ, மெததும்பர, டெல்தொட்ட, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்க இஹல கோரளை மற்றும் உடுதும்பர.

கேகாலை மாவட்டம் – அரநாயக்க, தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்டை.

நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் தலவாக்கலை.

இரத்தினபுரி மாவட்டம் - ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி.எச்சரிக்கை நிலை 1 கேகாலை மாவட்டம் – கேகாலை.

நுவரெலியா மாவட்டம் – ஹங்குரன்கெத்த.

இரத்தினபுரி மாவட்டம் – நிவித்திகல மற்றும் குருவிட்ட. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள், மண்சரிவின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவுறுத்தியுள்ளது.