நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது அவசியமற்றது என்றும், அதற்குப் பதிலாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை வழங்குவதுமே தற்போதைய காலத்தின் தேவை என்று மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிழகழ்ச்சியில் கலந்…

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது அவசியமற்றது என்றும், அதற்குப் பதிலாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை வழங்குவதுமே தற்போதைய காலத்தின் தேவை என்று மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிழகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,

தற்போதைய இலங்கை அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளைத் தீவிரமாக கையாள்கின்றது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் வழக்கில் ராஜபக்சர்கள் சம்மந்தப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் இந்த அரசாங்கம் அதில் கவனம் செலுத்துகின்றது.

ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அல்லது காணாமல் போனோர் விவகாரங்களில் மௌனம் காக்கின்றது.

இலங்கையின் இனவாதக் கட்டமைப்பிலிருந்து அரசு விடுபடத் தயாராக இல்லை.

எனவே, தமிழர்களுக்கு நீதிகிடைக்க உள்ளக விசாரணைகளை விட சர்வதேச பொறிமுறை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலையீடு மட்டுமே சிறந்த வழியாகும் என்று குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..