அரசால் வளமான நாடும் அழகிய வாழ்க்கையும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(04.08.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்ப…

அரசால் வளமான நாடும் அழகிய வாழ்க்கையும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(04.08.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.விவசாயிகளின் பிரச்சினை அவர் மேலும் உரையாற்றுகையில், "2024ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி நாட்டில் 39 இலட்சம் முதியோர் சமூகம் காணப்படுகின்றனர். இவர்களுக்குக் கடந்த காலத்தில் 15 இலட்சம் சேமிப்புக் கணக்கிற்கு 15 சதவீத வட்டி கிடைத்த போதிலும், இன்று அந்த வட்டி 7 சதவீமாகக் குறைந்துள்ளது. அரசாங்கம் கூறும் ஸ்திரத்தன்மையும் வளமான நாடும் இதுதானா?

விவசாயிகளுக்குச் சிறந்த உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என வாக்களித்துவிட்டு, வயல்வெளிகளுக்குள் இறங்கி நெற்கதிர்களைக் கடித்துக்கொண்டு நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறிவிட்டு இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. உரிய நேரத்தில் விதை நெல் கிடைக்காததுடன், அவை தரம் குறைந்தவையாகவும் உள்ளன. விவசாய இரசாயனப் பொருட்களின் விலையேற்றம், தரமின்மை, உபகரணங்கள் மீதான வற் வரி மற்றும் மனித - யானை மோதல்களால் விவசாயிகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.சர்வதேச நாணய நிதியம் முதன்மை மீதியை 2.5 ஆக இருக்கச் சொன்ன போதிலும், அரசு அதனை 5.4% வரை அதிகரித்து மக்கள் மீது எல்லையற்ற வரிச் சுமையைச் சுமத்தியுள்ளது.அரசின் வருமான இலக்குகள்அரசின் வருமான இலக்குகளும் வரி மூலமே பெறப்படுகின்றன. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்திற்க்கு 52% பங்களிப்பு வழங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்பட்டு வருகின்றன.

மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருளைப் பெற்றுத்தரவில்லை.ஈரான் மோதல்கள் காரணமாக ஏனைய நாடுகள் வரிகளைக் குறைத்த போதிலும், நம் நாட்டில் அது நடக்கவில்லை. 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பில்லியன்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், களத்தில் எந்த உதவியும் சென்றடையவில்லை. பொய் கூறாமல், மக்களை ஏமாற்றாமல், இப்போதாவது மக்களுக்கு வழங்கிய 'வளமான நாடு, அழகான வாழ்க்கை' வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.