ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் மூன்றில் ஒரு பங்கு மாகாணங்களில் 'சிறுவர் உடல் மெலிவு' ஆபத்தான அளவை எட்டியுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படு…

ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் மூன்றில் ஒரு பங்கு மாகாணங்களில் 'சிறுவர் உடல் மெலிவு' ஆபத்தான அளவை எட்டியுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது.கோரிக்கை

இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுவதாகவும், பலர் மிகவும் தாமதமாகவே மருத்துவ மையங்களுக்கு அழைத்து வரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ஆப்கானியர்கள் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சர்வதேச நிதி உதவியில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு ஆகியவையே இந்நிலைக்கு முதன்மை காரணங்களாகும். நிதியுதவி தட்டுப்பாடு காரணமாக, கடுமையான பஞ்சத்தைத் தடுக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வந்த உணவு விநியோகத் திட்டங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், இலட்சக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சிறுவர்களின் உயிரைப் பாதுகாக்கவும் அடுத்த ஆறு மாதங்களுக்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.