ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையும் மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் அமைதி…
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையும் மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தம் செய்வதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.பேச்சுவார்த்தை
ஆனால், அமெரிக்காவுடன் எந்தவித நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஓமன் நாட்டினருடன் மட்டுமே கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஓமன் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த உலர் சரக்குக் கப்பல் மீது அடையாளம் தெரியாத பொருள் தாக்கியதில், கப்பலிலிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.இந்தத் தாக்குதலில் மாலுமி ஒருவர் மாயமாகியுள்ளார்.பொருளாதார நெருக்கடி
உலகளவில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20 சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் தற்போது கப்பல் போக்குவரத்து பெருமளவில் முடங்கியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், சர்வதேச சந்தையில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கிப் போரைத் தொடரவே ஈரான் முயன்று வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அதேவேளையில், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பின்னணியில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.












