அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் சூழ்நிலையில், பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஈரான் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில்…
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் சூழ்நிலையில், பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஈரான் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிப்பதாகவும், ஆனால் பொதுவெளியில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓமனுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறி, ஈரான் தலைவர்கள் இரட்டை வேடம் போடுவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டிலும், கடுமையான பாதுகாப்பு வளையத்திலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்காவின் அனுமதி இன்றி அங்கு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் வெளியிடும் விளக்கங்கள் வெறும் அரசியல் அறிக்கைகளே எனவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
அத்துடன், ஈரான் எந்தச் சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்படாது என்றும், இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டப்படும் வரை அல்லது ஈரான் முழுமையாக சரணடையும் வரை அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்கள் தொடரும் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.












