இந்த ஆண்டில் உருவாகிவரும் எல் நினோ காலநிலை மாற்றம், கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகத் தீவிரமான நிகழ்வாக அமையும் என பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வழமையாக எல் நினோ நிகழ்வின் போது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 1 முதல் 2 பாகை…

இந்த ஆண்டில் உருவாகிவரும் எல் நினோ காலநிலை மாற்றம், கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகத் தீவிரமான நிகழ்வாக அமையும் என பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வழமையாக எல் நினோ நிகழ்வின் போது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 1 முதல் 2 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.எனினும், எதிர்வரும் மாதங்களில் இது 3 பாகை செல்சியஸிற்கும் (5.4°F) அதிகமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடுமையான வறட்சி இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள நீண்டகால வானிலை கணிப்புப் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஆடம் ஸ்கைஃப், "இது முன்னெப்போதுமில்லாத ஒரு தீவிரமான காலநிலை நிகழ்வாகும். எனது கணிப்புகளில் இவ்வளவு வலுவான எல் நினோ சமிக்ஞையை நான் இதுவரை கண்டதில்லை" எனத் தெரிவித்துள்ளார். இந்த எல் நினோ தீவிரமடைவதால், தென்னமெரிக்கா, மேற்கு பசிபிக் பிராந்தியம், தென்னாப்பிரிக்கா மற்றும் வடகிழக்கு அவுஸ்திரேலியா போன்ற பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.

அதேவேளை, பிரித்தானியா உள்ளிட்ட வடமேற்கு ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும் இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் அதிக மழையும் புயல் சூழலும் உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமடைதலுடன் இந்த எல் நினோ நிகழ்வும் சேர்வதால், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டானது உலக வரலாற்றிலேயே மிக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவாக அதிக வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.