கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதே பரீட்சைக…

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதே பரீட்சைக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கான பதில்மாறாக, இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் பரீட்சாதிகளுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக இது தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கான பதிலாக "நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2020.02.25 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றரிக்கை மற்றும் 2022.04.26 ஆம் திகதிய 03/2022 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட சுற்று நிரூபத்துக்கு அமைவாக நியமனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25-க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் கிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதுடன், இதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.

தற்போது வரை கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 25க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த போட்டிப் பரீட்சையை விரைவில் நடத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.