கன்னடத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் பிரம்மாண்டமான பூங்கொத்தை உருவாக்கி தனது காதலிக்கு மிக வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய நிகழ்வு இணையத்தில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சிறப்புமிக்க தருணத்திற்காக 40,000 முதல் 45,000 வரை புதிய மலர்களைக் கொ…

கன்னடத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் பிரம்மாண்டமான பூங்கொத்தை உருவாக்கி தனது காதலிக்கு மிக வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய நிகழ்வு இணையத்தில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சிறப்புமிக்க தருணத்திற்காக 40,000 முதல் 45,000 வரை புதிய மலர்களைக் கொண்டு இராட்சத அளவில் இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது.இணையவாசிகளை திகைக்கவிட்ட இளைஞன் ஒரு மலரின் சராசரி விலை ரூ.20 என கணக்கிடப்பட்டால், இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிப்பதற்கான மலர்களின் செலவு மட்டும் சுமார் ரூ.9 இலட்சத்தை (இந்திய ரூபாவில்) எட்டும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், போக்குவரத்து மற்றும் தொழிலாளர் செலவுகளைப் பொறுத்து இதன் இறுதி மதிப்பு மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலை வெளிப்படுத்த இது ஒரு அதிநவீன மற்றும் பிரம்மாண்டமான வழியா அல்லது சமூக வலைதள விளம்பர உத்தியா என இணையவாசிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இருப்பினும் இந்த வித்தியாசமான முயற்சி பலரையும் ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.