நுவரெலியா கிரகரி வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் போனி ஒன்றை இளைஞர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். போனியைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயதுட…

நுவரெலியா கிரகரி வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் போனி ஒன்றை இளைஞர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

போனியைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயதுடைய இளைஞரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர் நுவரெலியா ஸ்ட்ராபத் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரிய அனுமதிகளுடன் போனி சவாரி சேவை

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை 28ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிரகரி வாவிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படும் விலங்குகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிய அனுமதிகளுடன் போனி சவாரி சேவையில் ஈடுபட்டு வரும் நடத்துநர்கள், தனிநபர் ஒருவரின் செயல் காரணமாக அனைத்து போனி நடத்துநர்கள் மீதும் தவறான கருத்து ஏற்படுவது நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளனர்.

விலங்குகளின் சுகாதாரம், உணவு, ஓய்வு மற்றும் சேவை நிலைமைகள் தொடர்பில் தெளிவான தரநிலைகளை அறிமுகப்படுத்தி, போனி சவாரி சேவைகளை அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.