சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் அவுஸ்திரேலியாவைப் போன்ற வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடாக இலங்கை மாற்றப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மெல்பேர்னில் நடைபெற்ற Sri Lankan Entrepreneurs’ Night…
சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் அவுஸ்திரேலியாவைப் போன்ற வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடாக இலங்கை மாற்றப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மெல்பேர்னில் நடைபெற்ற Sri Lankan Entrepreneurs’ Night 2026 நிகழ்வில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.சுதந்திரமான வாழ்க்கை “இங்கு இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள். நாம் பேசும் மொழி வேறுபட்டாலும், ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். கல்வி, தொழில் அல்லது சுதந்திரமான வாழ்க்கைக்காக நீங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கலாம். உங்களுடனும் எங்களுக்கு வாக்களித்த 18 மில்லியன் மக்களுடனும் இணைந்து, குறுகிய காலத்திற்குள் இலங்கையை அவுஸ்திரேலியாவைப் போன்ற நாடாக மாற்றுவோம் என நான் உறுதியளிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால தலைமுறையினர் சுதந்திரமாக கல்வி கற்கவும் வாழவும், அனைவருக்கும் சமமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வகையிலும், மக்கள் வாழ விரும்பும் நாடாக இலங்கையை உருவாக்குவதே நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பொருளாதார சவால் இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வலுவான உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்குவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற, முதலீட்டுக்கு உகந்த மற்றும் வெளிப்படையான புதிய பொருளாதார சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தொழில் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல இலங்கை தொழில் முனைவோர் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியா–இலங்கை வர்த்தக மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மெல்பேர்னில் உள்ள The Grandeur மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கையின் மெல்பேர்ன் கொன்சல் ஜெனரல் பிரதீபா சாரம், அவுஸ்திரேலிய பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்












