ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருந்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவரை இடையில் போக விடமாட்டோம்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருந்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவரை இடையில் போக விடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எல்லாவற்றையும் விட்டுச் செல்வதாக ஜனாதிபதி அண்மையில் கூறியது வேறு அர்த்தத்தில் ஆகும் எனவும் அவர் பதவியை விட்டு விலகுவதாக அர்த்தப்படுத்த வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்தபோது திட்டங்களை முன்னெடுப்பதற்கு பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்களையே முன்னோக்கி கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், மேற்குலக நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு இந்த அரசாங்கம் அடிபணிந்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே எங்களால் செய்ய முடியாதவற்றை இவர்களைக் கொண்டேனும் இந்த நாட்டு மக்களுக்கு செய்து கொள்ள வேண்டும் எனவே இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம் அவ்வாறு இவர்களைப் போக விட முடியாது எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்