காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கௌரவ அரவிந்த செனவிரட்ன தலைமையில் நேற்று (13) மு.ப 10.30 மணிக்கு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட மேல…
காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கௌரவ அரவிந்த செனவிரட்ன தலைமையில் நேற்று (13) மு.ப 10.30 மணிக்கு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.எஸ்.ஜெயக்காந் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்கள் புனரமைப்பு, கால்வாய்கள் திருத்தம் வேலை, அணைக்கட்டு வேலைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் விவசாய விரிவாக்கத்திற்கு காணிகளின் தேவை, வனவளத் திணைக்களம், வன ஜுவராசிகள் திணைக்களம் முதலானவற்றால் எல்லைப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், பொறியியலாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.












