கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் நிலநடுக்கம் தொடர்பா…
கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் நிலநடுக்கம் தொடர்பான பல திடுக்கிடும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.சக்திவாய்ந்த நிலநடுக்கம் மேற்கு கொலம்பியாவின் சொகோ (Choco) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே பூமிக்கு அடியில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
தொடர்ந்து பல நில அதிர்வுகள் பதிவாகின. இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.
அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.NEW footage is circulating from a magnitude 7.4 earthquake that struck Colombia's Pacific region today. The epicenter was near San José del Palmar in Chocó department, at a depth of around 96 km. It was felt strongly across much of Colombia—including Bogotá, Medellín, and… pic.twitter.com/X03limcIts— Clash Report (@clashreport) August 10, 2026 இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது.இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.அவசரநிலை பிரகடனம்குறிப்பாகக் காளி (Cali) மற்றும் பெரேரா (Pereira) நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.
நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் நடைமுறையில் உள்ளது.
நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,
நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.
60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.A powerful earthquake struck Colombia, and several buildings appeared to be about to collapse due to the powerful tremors. #Earthquake #colombia #colombiaearthquake https://t.co/Kp2jWEuXlf pic.twitter.com/10A3kYSs2D— Bara (@Reueus) August 11, 2026
நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
காளி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












