மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர சம்பவம் தொடர்பாக இன்று (03) இலங்கை பொலிஸ் தலைமையகம் ஆய்வு நடத்தும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நேற்று (02) நீதவான் விசாரணை நடத்தப்பட்டதாகவும், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, 104 கைதிகளை மற்ற சிறைகளுக்கு மாற்றுவதற்கா…

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர சம்பவம் தொடர்பாக இன்று (03) இலங்கை பொலிஸ் தலைமையகம் ஆய்வு நடத்தும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நேற்று (02) நீதவான் விசாரணை நடத்தப்பட்டதாகவும், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, 104 கைதிகளை மற்ற சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம்

அதன்படி, அவர்கள் தும்பறை, வெலிக்கடை, புஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சிறையில் நடந்த கலவரத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்து தற்போது ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த மோதல் தொடர்பாக பல்வேறு திணைக்களங்களால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மஹர சிறையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு கைதிகளைச் சந்திக்க பார்வையாளர்களை அனுமதிப்பதை நிறுத்த சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பதற்றமான சூழ்நிலையை வழிநடத்தியுள்ள கைதிகள்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், 'சாத்தான்', 'அசார்', 'பட்டா' மற்றும் மற்றொரு கைதியும் இணைந்தே இந்த பதற்றமான சூழ்நிலையை வழிநடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

​பதற்றநிலையின் போது வன்முறையில் ஈடுபட்ட கைதிகளை அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரைப் பூசா உள்ளிட்ட மேலும் 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யச் சிறைச்சாலைகள் திணைக்களம் நேற்று பிற்பகல் நடவடிக்கை எடுத்தது.

​சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இந்நாட்களில் நிலவும் போதைப்பொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.