மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்து 15 நிமிடங்களுக்குள் கைதிகள் தங்களது அறைகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, மஹர சிறைச்சாலை அதன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது. மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்து இ…

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்து 15 நிமிடங்களுக்குள் கைதிகள் தங்களது அறைகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, மஹர சிறைச்சாலை அதன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்து இன்று காலை (2) சிறை வளாகத்திற்கு பொலிஸ்,சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் இராணுவ அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் தங்களது 300 அதிகாரிகள் இணைந்துள்ளதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது. மஹர சிறைச்சாலைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு இதற்கமைய, மஹர சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (FTF) மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரி தெரிவித்துள்ளது. மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டுள்ளதாகவும், அனைத்து கைதிகளும் தற்போது அவரவர் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சிறையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று மாலை சுமார் 4 மணி முதல் சிறைக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (FTF) மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.