வெளிப்படைத்தன்மையான நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்துள்ளன எனவும் மனித உரிமைகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உலக…
வெளிப்படைத்தன்மையான நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்துள்ளன எனவும் மனித உரிமைகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவை இணைந்து கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் நேற்று (12) இதனைத் தெரிவித்தார்.
மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செயற்பட முடியாது என்றும் அதற்கு அரச, தனியார் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்டு நிதிப் பற்றாக்குறை 2.5 முதல் 4 டிரில்லியன் டொலர்களாக உள்ளதுடன், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் அந்தப் பற்றாக்குறை 1.5 டிரில்லியன் டொலர்களாக உள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் இப்பிராந்தியத்தில் அளவிடக்கூடிய நிலையான அபிவிருத்தி இலக்குகளில் 88 சதவீதம் தவறவிடப்படும் அபாயம் உள்ளதால், நிதி முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டும்.
சவாலான காலத்திற்குப் பிறகு இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், 2025 ஆம் ஆண்டில் நாடு 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், உள்நாட்டு உற்பத்தி 108.8 பில்லியன் டொலர்களாக உயர்ந்து தனிநபர் வருமானம் 5,000 டொலர்களைத் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், அரசாங்கத்தின் நோக்கம் வெறுமனே புள்ளிவிவரங்களில் தெரியும் வளர்ச்சி மட்டுமல்ல, நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் நன்மைகள் நியாயமாகப் பங்கீடப்படும் உண்மையான பொருளாதார மாற்றமே ஆகும் என்று அவர் வலியுறுத்தினார்.
வணிகத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும், இருப்பினும் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலீடுகளை அல்லாமல், மனித உரிமைகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளையே எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். (a)


-558902_850x460.jpg)









