தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத சூதாட்டம் காரணமாக சமூகத்தில் பாரிய பேரழிவு உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்த…

தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டவிரோத சூதாட்டம் காரணமாக சமூகத்தில் பாரிய பேரழிவு உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.

கோப் (COPE) உபகுழு முன்னிலையில் இரு லொத்தர் சபைகளின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்த போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.லொத்தர் சீட்டின் கடைசி இரண்டு எண்களுக்காக பந்தயம்

அதாவது, 0 முதல் 9 வரையிலான எண் அமைப்புகளிலிருந்து 2 எண்களைத் தேர்ந்தெடுத்து, அன்றைய தினம் வெளியாகும் லொத்தர் சீட்டின் கடைசி இரண்டு எண்களுக்காக இதில் பந்தயம் கட்டப்படுகின்றது.

தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளால் இரவு 7.30 மணியளவிலேயே சீட்டிழுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஒரு மாதத்திற்குத் தேவையான அனைத்துக் சீட்டிழுப்புகளும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு தினமும் வெளியிடப்படுவதாக போலி தகவல்களை மக்களிடையே பரப்பி, WhatsApp குழுக்கள் மூலம் ஒழுங்கமைப்பு ரீதியாக இந்த பண மோசடிகள் செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.முறைப்பாடுகள் பதிவு

இதற்கமைய, பல பகுதிகளில் 30,000 ரூபாய் முதல் அதற்கு மேலதிகமாகவும் பந்தயம் கட்டப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாகப் பலரும் தங்களது நிலங்கள் மற்றும் சொத்துக்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டவிரோத சூதாட்டம் மேலும் பரவினால், லொத்தர் சபைகளின் வணிக நிலைத்தன்மை, சாதாரண மக்களின் வாழ்க்கையும் பாதிப்புக்கள்ளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.