நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் பிரித்தானியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதில் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் தான் தங்கியிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய விச…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் பிரித்தானியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதில் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் தான் தங்கியிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இந்த பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை.. சிட்டி யுனிவர்சிட்டி லண்டன் வருவதற்கு முன்னர் நான் கார்டிப் (Cardiff) நகரத்தில் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். கார்டிப் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கார்டிப்பை நான் தேர்ந்தெடுப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது றக்பி விளைாயாட்டில் நான் கொண்டிருந்த ஈடுபடாகும்.றக்பி விளையாடுவதற்காகவே அங்கு சென்றேன்.2006, 2007 காப்பகுதியியேலே நான் தங்கியிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது.இச்சம்பவம் தொடர்பில் Cardiff பொலிஸில் முறைப்பாடும் செய்திருந்தேன்.அவர்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தினர்.ஆனால் நான் அது தொடர்பில் மேலதிக தகவல்களை தேடி பார்க்கவில்லை.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல கதைகள் சொல்லப்பட்டன.புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரை குற்றம்சாட்டினர். ஆனால் நான் அதைத் தொடர விரும்பவில்லை. ஏனெனில் அந்தக் காலப் பகுதியில் இருந்த சூழ்நிலை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த அரசியல் நெருக்கடிகள் பற்றி தெரிந்திருந்ததால். அத்தோடு புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் (diaspora) பெரிய அச்சுறுத்தல்கள் இருந்தன. சில நிகழ்வுகளுக்குச் சென்றால் கூட புல்லட் புரூப் ஜாக்கெட் (bulletproof jacket), அதாவது குளிர்க்காக அணியும் எனது ஸ்வெட்டருக்குள் (armor plate) அணிந்துதான் சென்றேன். அந்த விடயங்களை நாங்கள் அக்காலத்தில் ஊடகங்களுக்குச் சொல்லவில்லை. இதில் அரசியல் இலாபம் பெறவும் எங்களுக்குத் தேவை இருக்கவில்லை. தீவிர பாதுகாப்புக் காரணங்களால் 2006, 2007, 2008 காலப்பகுதியில் நான் தங்கியிருந்த இடங்களைக் கூட அவ்வப்போது மாற்ற வேண்டியதாயிற்று. இங்கிலாந்தில் படிக்கும் போது, சில ஜனாதிபதிகளின் பிள்ளைகள் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு சென்றார்கள்.இராணுவத் தளபதிகளின் பிள்ளைகள் கூட அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அது பேசக் கூடாத ஒரு விடயம், ஏனெனில் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் நான் அழைத்துச் செல்லவில்லை. யுத்தம் தொடங்கியதும் பாதுகாப்பு காரணங்களால் நான் லண்டனுக்கு மாறினேன். அப்போதுதான் சிட்டி யுனிவர்சிட்டியைத் தேர்ந்தெடுத்தேன். அதைத் தேர்ந்தெடுப்பதற்கும் றக்பி விளையாட வேண்டும் என்பதற்காகத்தான்.












