யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவின் தேர் திருவிழா நாளை(27) காலை 7:30 மணியளவில் இடம்பெறவுள்ளது. அத்துடன், தீர்த்த திருவிழா நாளை மறுதினம்(28) வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. சப்பறத் திருவிழா இன்று(26) பெரும் திரளான மக்கள்…

யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவின் தேர் திருவிழா நாளை(27) காலை 7:30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அத்துடன், தீர்த்த திருவிழா நாளை மறுதினம்(28) வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

சப்பறத் திருவிழா இன்று(26) பெரும் திரளான மக்கள் சூழ சப்பறத் திருவிழா 7:00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளதுடன், சிறப்பு பூஜைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதேவேளை சந்நிதி முருகன் ஆலய பெருந் திருவிழாவில் அடியவர்கள் தொடர்ச்சியாக தூக்கு காவடி, பறவை காவடி, பால் காவடி, பால் செம்பு, அங்க பிரதட்டை உட்பட பல்வேறு நேற்றிக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

சந்நிதி முருகன் ஆலயத்தின் பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாக்களான தேர்த்திருவிழா, தீர்த்த திருவிழா போன்றவற்றிற்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் நீர் வழங்கல், சுகாதார பராமரிப்பு போன்ற பணிகளையும், முதலுதவி சேவைகளுக்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை முதலுதவிச் சங்கம், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு படுத்தல்களுக்காக சாரனிய தொண்டர்கள் உட்பட்ட பல தொண்டர் அமைப்புகளும் தமது சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறன.

முழு ஆதரவை வழங்கும் பொலிஸார் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றது.

மக்களுடைய பாதுகாப்பு, போக்குவரத்து பணிகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறும் தேர் திருவிழா, தீர்த்த திருவிழா ஆகியவற்றிற்கு மக்களின் போக்குவரத்து வசதி கருதி இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் என்பன விசேட போக்குவரத்து வசதிகளை அதிகாலையிலிருந்து ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், இந்த திருவிழாக்களில் பல ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.