அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் சிறப்புச் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பணி நேரங்களிலும், உத்தியோகபூர்வ கடமைகளுடன் தொடர்புடை…
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் சிறப்புச் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பணி நேரங்களிலும், உத்தியோகபூர்வ கடமைகளுடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக முக்கிய தகவல்களை வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு
சமூக ஊடகங்களில் ரயில்வே தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவது, ரயில்வே சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கத்தை பாதிக்கக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய சுற்றறிக்கையின்படி, ரயில்வே திணைக்களத்தின் பொது மேலாளர், உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே ரயில்வே தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை வெளித் தரப்பினருக்கும் ஊடகங்களுக்கும் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை மீறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












