நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களை நிலைகுலையச் செய்துள்ள பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட 384 பேர் மாயமாகியுள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடும் ப…

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களை நிலைகுலையச் செய்துள்ள பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட 384 பேர் மாயமாகியுள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடும் போதே கோஷி நதியில் ஏற்பட்ட இந்தச் சீற்றத்தினால் ஏராளமான வீடுகள், முக்கியச் சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நேபாளப் பகுதியில் வழக்கமான கனமழை ஏதும் இல்லாத நிலையில், இமயமலையின் பனிப்பாறை சரிவினால் (Glacial Avalanche) ஆற்றில் ஏற்பட்ட அடைப்பு திடீரென உடைந்து பெருக்கெடுத்ததே இந்த வெள்ளத்திற்குக் காரணம் என பருவநிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர். ரசுவா மாவட்டத்தில் உள்ள சயாப்ரு பேசி மற்றும் திமுரே பகுதிகளில் வெள்ளநீர் ஆபத்தான மட்டத்தில் பாய்வதால், மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத சூழல் நிலவுகிறது.உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு மேலும், சுமார் 430 மெகாவாட் மின் உற்பத்தியை வழங்கும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. எல்லைக்கு மறுபுறம் அமைந்துள்ள சீனாவின் திபெத் பகுதியிலும் பேரழிவு தரும் நிலச்சரிவு ஏற்பட்டு, கயிராங் துறைமுகப் பகுதியில் சாலை, மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. மாயமானவர்களை மீட்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று, நீர்மின் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த 8 பணியாளர்கள் வெள்ளத்தில் மாயமாகியுள்ளனர்; மேலும் 10 பேர் சிக்கியுள்ளனர்.அவர்களை மீட்க தென் கொரிய அரசு சிறப்பு மீட்புக் குழுவை நேபாளத்திற்கு அனுப்பவுள்ளது. இந்த விபரீத நிலை குறித்து நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசரக் கூட்டத்தைக் கூட்டி, இராணுவம், ஆயுதப்படை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினரை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். போதே கோஷி மற்றும் திரிசூலி நதிக்கரையோரம் வாழும் பொதுமக்கள் உடனடியாக மேடான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.