செம்மணி மனிதப் படுகொலைக்கு நீதி கோரி எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாகவும் மக்களை ஒன்றிணைக்கும் முகமாகவும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் தாயகச் செயலணியின் ஏற்ப…

செம்மணி மனிதப் படுகொலைக்கு நீதி கோரி எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாகவும் மக்களை ஒன்றிணைக்கும் முகமாகவும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரை யாழ் செம்மணியில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இறுதி நாளான 17ம் திகதி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஐநா காரியாலயம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டு அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மகஜர் கையளிக்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் செயற்பாடுகள் பல தாயக செயலணியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக விஸ்வமடு, ரெட்பாணா, வள்ளுவர் கோட்டம் மற்றும் கிளிநொச்சி சந்தை ஆகிய பிரதேசங்களில் இன்றைய தினம் செம்மணிப் படுகொலையினை மையப்படுத்தி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை விபரிக்கும் முகமாக விழிப்புணர்வு வீதி நாடகம் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது குறித்த நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு இசையால் அழைப்பு முகமாக பாடல்களும் இசைக்கப்பட்டதுடன் இந்நீதிக்கான போராட்டத்திற்கு மக்களுக்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.