ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின் மனநலத்தைப் பாதிக்கும் வகையில் தளங்களை வடிவமைத்ததாகக் கூறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகள் இன்…
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின் மனநலத்தைப் பாதிக்கும் வகையில் தளங்களை வடிவமைத்ததாகக் கூறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகள் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெற்றோர்களின் கோரிக்கை அமெரிக்காவின் 29 மாநிலங்கள் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.
மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடகத் தளங்களில் தொடர்ச்சியான ஸ்க்ரோலிங் மற்றும் அல்காரிதம் தூண்டுதல்கள் போன்ற அம்சங்கள் மூலம் சிறுவர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும், பெற்றோரின் அனுமதியின்றி அவர்களின் தரவுகளைச் சேகரிப்பதாகவும் மாநில சட்டவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ட்ரில்லியன் கணக்கில் அபராதம் விதிக்க வாய்ப்பு இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்திற்கு 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெற்றோரின் கட்டுப்பாடுகளை உறுதி செய்தல், மனநலத்தைப் பாதிக்கும் அல்காரிதம்களை மாற்றுதல் மற்றும் தானாக மறையும் செய்திகளைத் தடைசெய்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டாய மாற்றங்களை மெட்டா நிறுவனத்தில் கொண்டுவர வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்த வழக்கின் போது மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்கா மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலும் மெட்டா நிறுவனம் இவ்வாறான சட்ட மற்றும் ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
இந்த சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சமூக ஊடகங்களின் செயல்பாட்டு முறையில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.












