படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குற…

படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளார்கள். நீதித்துறை மற்றும் விசாரணை கட்டமைப்பு தொடர்பில் எவ்வழியிலாவது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தி அதனூடாக தம்மை பாதுகாத்துக்கொள்ளவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.எதிர்க்கட்சியினரின் விமர்சனம் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தி சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கியவர்கள் இன்று நீதித்துறையின் சுயாதீனம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. நீதித்துறைக்கு எதிராக செயற்பட்டால் அதன் பாதிப்பு எவ்வாறானதாக அமையும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே எதிர்க்கட்சியினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை.ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படப் போவதில்லை.

படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது கலக்கமடைந்து விசாரணை அதிகாரிகள் மீதும், நீதித்துறை கட்டமைப்பின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.