இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். இன்று (1…
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். இன்று (13.08.2026) நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் வெளியிட்டுள்ளார்.35 முக்கிய குற்றவாளிகள்
மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், 2024, 2025 மற்றும் இந்த ஆண்டில், இந்த சிவப்பு அறிவிப்புகள் மூலம் 38 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று கூறினார். கூடுதலாக, பொலிஸ் மா அதிபரின் (IGP) நேரடித் தலையீட்டின் மூலம் மேலும் 35 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் நிலங்கள் உள்ளிட்ட பெரும் அளவிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு சிறப்புத் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன்படி, சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, 2024இல் ரூ.1,490 மில்லியனும், 2025இல் ரூ. 1,549 மில்லியனும் கோரப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 1, 2026 முதல் இன்று வரை ரூ. 839 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடக ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.












