எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதலீட்டாளர்கள் மிகவும் அவசியம், அவர்களுக்கு நாட்டின் நடைமுறைக்களுக்கேற்ப உரிய வாய்ப்பை மேம்படுத்த வேண்டும் என அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.…
எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதலீட்டாளர்கள் மிகவும் அவசியம், அவர்களுக்கு நாட்டின் நடைமுறைக்களுக்கேற்ப உரிய வாய்ப்பை மேம்படுத்த வேண்டும் என அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்கும் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று(30.07.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டுள்ள வில்லேஜ் ஹோட்டல் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது.
முதலீடுகளை அதிகப்படுத்த திட்டம்இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட முதலீட்டாளரை நேரில் அழைத்து, அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைவாகத் திட்டத்தை ஒழுங்குமுறைப்படுத்தப் பணிப்புரை வழங்குவது என்றும், அதற்கு அவர் ஒத்துழைக்காவிடின் உரிய திணைக்களங்கள் ஊடாகச் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளை நாம் வரவேற்கும் அதேவேளை, சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இதன்போது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், ஊர்காவற்றுறை - பருத்தியடைப்புப் பகுதியில் முன்னெடுப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள “நலன்புரி நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தித் திட்டம்” தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த திட்டம் குறித்து, பிரதேச செயலாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து, அப்பிரதேச மக்களைச் சந்தித்துத் திட்டத்தின் நன்மைகள் தொடர்பில் விளக்கமளித்துத் தெளிவுபடுத்திய பின்னர் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டது. ஓய்விடத் திட்டம்
அரியாலையில் அமைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள “யாழ்ப்பாண கரையோரக் கலாசார ஓய்விடத் திட்டம்” குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
திட்டத்துக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அதனைப் பிரதேச செயலக நிலப்பயன்பாட்டுக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து, ஏனைய நடவடிக்கைகளைத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.












