உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் பசன் அமரசிங்க முன்னிலைய…

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் பசன் அமரசிங்க முன்னிலையில் இன்று இந்தத் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜகச்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரஅஸங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண,  உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது.குறித்த நபர்கள் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நடத்திய ஊடக சந்திப்புகள் மற்றும் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை ஆய்வு செய்த நீதவான், அவர்கள் "வெளிப்படையாகவே நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே உள்ளதால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அங்கு சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்கு, நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போது மூன்று பிரதான சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுரேஷ் சலே (முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர்), சரத் சமந்த (மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி), ஜெக்கில் பாஸ் (தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் அதிகாரி) ஆகியோர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பலருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் மீதான விசாரணைகளும் தொடர்கின்றன. இவ்வாறான ஒரு பின்னணியில், விசாரணைகளைத் திசைதிருப்பும் வகையிலும் நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையிலும் கருத்து வெளியிட்டதாக கம்மன்பில, வீமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.