இந்தியாவில் தங்கியுள்ள பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உடன் இணையவழி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் பூர்வீக இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் இரவு சு…

இந்தியாவில் தங்கியுள்ள பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உடன் இணையவழி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் பூர்வீக இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல் இரவு சுமார் 8.45 மணியளவில், பங்களாதேஷின் மகுரா நகரிலுள்ள கேஷாப்மோர் பகுதியில் அமைந்துள்ள ஷகிப் அல் ஹசனின் பூர்வீக இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

தாக்குதலின் போது வீடு சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், இந்தியாவின் நியூ டெல்லியில் நடைபெற்ற வெளிநாட்டு செய்தியாளர்கள் கழகத்தின் (Foreign Correspondents' Club) ஏற்பாட்டில் ஷேக் ஹசீனா இணையவழியாக உரையாற்றியதையடுத்து இடம்பெற்றுள்ளது.Torching residences : the cost of attending Awami League press conference Neo fascism engulfs Bangladesh A grisly petrol bomb attack took place at the residence of Bangladesh’s celebrated cricket icon Sakib Al hasan, hours after the world famous star cricketer appeared at a… pic.twitter.com/Uqmwwih3XG— Bangladesh Awami League (@albd1971) August 5, 2026

இதுகுறித்து அவாமி லீக் வெளியிட்ட அறிக்கையில், "அவாமி லீக் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றதற்கான விலையாக வீடுகள் தீவைக்கப்படுகின்றன. புதிய பாசிசம் பங்களாதேஷை ஆட்கொண்டுள்ளது" எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், "ஷகிப் அல் ஹசனின் இல்லம் மீது நடத்தப்பட்ட இந்த பெட்ரோல் குண்டுத் தாக்குதல், ஜனநாயகத்தை உருவாக்குவதாகக் கூறி அவாமி லீக் ஆதரவாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட வன்முறையின் மற்றொரு எடுத்துக்காட்டாகும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேக் ஹசீனா

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஷேக் ஹசீனா, இந்த ஆண்டு டிசம்பரில் பங்களாதேஷ் திரும்புவேன் என்றும், கைது செய்யப்படவோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலும்கூட அதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

"எனது திரும்புவது அதிகாரத்திற்காக அல்ல. பங்களாதேஷை மீண்டும் வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் வளமான பாதைக்கு கொண்டு செல்வதற்காகவே."என்று அவர் கூறினார்.

மேலும்,

"என்னை சிறையில் அடைக்கலாம், கொல்லவும் கூட முடியும். ஆனால் நான் என் மக்களுடன் இருப்பதற்காக நாடு திரும்புவேன். நான் முடிவு செய்துவிட்டேன்."

எனவும் அவர் தெரிவித்தார்.

2024 ஒகஸ்ட் 5ஆம் திகதி அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்த பின்னர், ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பரில், 2024 மாணவர் போராட்டங்களை ஒடுக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்" என்ற குற்றச்சாட்டில் டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆஜராகாத நிலையில் மரண தண்டனை விதித்தது. பலமுறை கோரிக்கை

அதன் பின்னர், அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்தி ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் அரசு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை,

"பங்களாதேஷில் வீடுகள், பணியிடங்கள், கல்வி நிலையங்கள் அனைத்திலும் அச்சம் நிலவுகிறது. ஜனநாயகத்திற்கும் நீதிக்கும் போராடும் மக்களுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு அளிக்க வேண்டும்"

என ஷேக் ஹசீனா சர்வதேச சமூகத்திற்கும் அழைப்பு விடுத்தார். இந்த இணையவழி செய்தியாளர் சந்திப்பில், அவரது மகன் Sajeeb Wazed Joy மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் Mohibul Hasan Chowdhury Nowfel உள்ளிட்ட அவாமி லீக் தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றது தொடர்பாக, அதற்கு விளக்கம் கோரி பங்களாதேஷ் அரசு இந்தியாவிடம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.