ஜெர்மனியின் லைப்ஸிக்/ஹலே விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட டிஎச்எல் (DHL) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, காற்றில் பறந்து கொண்டிருந்தபோது அறியப்படாத பொருள் மீது மோதியதால் ஹேனோவர் நகரில் திட்டமிடப்படாத அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தின் முன்பகுதியில் இலேசான சேதம் ஏற்ப…

ஜெர்மனியின் லைப்ஸிக்/ஹலே விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட டிஎச்எல் (DHL) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, காற்றில் பறந்து கொண்டிருந்தபோது அறியப்படாத பொருள் மீது மோதியதால் ஹேனோவர் நகரில் திட்டமிடப்படாத அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

விமானத்தின் முன்பகுதியில் இலேசான சேதம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விமான நிலைய ஓடுபாதை இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விமான நிலைய ஓடுபாதை அருகே வெடிபொருளுடன் கூடிய ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அந்த ட்ரோனுக்குள் வெடிபொருளை வெடிக்கச் செய்யும் சாதனம் இருந்ததையும், ஆனால் அது செயலிழந்த நிலையில் இருந்ததையும் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உக்ரைனின் அண்டனோவ் சரக்கு விமானத்திற்கு மிக அருகில் இந்த ட்ரோன் கண்டெடுக்கப்பட்டதால், வெடிபொருள் நிபுணர்கள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டு பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன.அவசர நிலை பிரகடனம் சமீபகாலமாக ஜெர்மனியின் இராணுவ மையங்கள், துறைமுகங்கள் மற்றும் தளவாட நிறுவனங்களின் வான்வெளியில் அனுமதியின்றி பறக்கும் ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ரஷ்ய முகவர்கள் இருக்கலாம் என ஜெர்மன் கூட்டாட்சி காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

எனினும், கண்டெடுக்கப்பட்ட ட்ரோன் குறித்து ஜெர்மன் உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வரும் வேளையில், இந்தச் சம்பவத்துக்கும் கடந்த கால வெடிப்புச் சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.